Published:Category:

மைதானத்திற்கு செல்லும் வீதி விடுவித்து கொடுக்கப்படும்.

#MIvDC

மைதானத்திற்கு செல்லும் வீதி விடுவித்து கொடுக்கப்படும்.

கிளிநொச்சி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதி படையினரிடமிருந்து விடுவித்து கொடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற பாடசாலை கல்விசார் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதியானது, இராணுவ முகாமிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளமையால், மாணவர்கள் ஏ9 வீதி ஊடாக சென்று விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டிய நிலை காணப்படுவது தொடர்பிலும், அது பாதுகாப்பற்றது என்ற விடயம் தொடர்பிலும் பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் அமைச்சரிடம் முன்வைத்தார்.

குறித்த விடயம் இலகுவானது எனவும், அதனை மாணவர் பாவனைக்காக விடுவிப்பதற்கான நடவடிக்கையை உடன் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்த அமைச்சர், அது தொடர்பில் விளக்கமாக எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 2000க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், விளையாட்டு மைதானம் கிளிநொச்சி மத்திய விளையாட்டு மைதானத்திற்கு பின்பகுதியில் அமைந்துள்ளது. அதற்கான வீதியை உள்ளடக்கி நகரில் உள்ள இராணுவ முகாம் அமைக்கப் பட்டுள்ளமையால், மாணவர்கள் நீண்ட தூரம் சுற்றி மைதானத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.

இந்த நிலையில், அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பாடசாலை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சர் சாதகமான பதில் வழங்கியுள்ளமையானது பாடசாலை சமூகத்தினர் மற்றும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

Markham நகரில் காணாமல் போன தமிழ் சிறுமி அஞ்சனா!

#MIvDC

Markham நகரில் காணாமல் போன தமிழ் சிறுமி அஞ்சனா!

Published:Category:

பள்ளி மீது ரான்சம்வேர் தாக்குதல் - திருடிய 500 ஜிபி தகவல் கசிவு!

#MIvDC

பள்ளி மீது ரான்சம்வேர் தாக்குதல் - திருடிய 500 ஜிபி தகவல் கசிவு!

Published:Category:

முதியவர் வயிற்றில் முழு கண்ணாடி டம்ளர்; மருத்துவர்கள் அதிர்ச்சி!

#MIvDC

முதியவர் வயிற்றில் முழு கண்ணாடி டம்ளர்; மருத்துவர்கள் அதிர்ச்சி!

Published:Category:

காரக்குழம்பில் காது துடைக்கும் பட்ஸ்: ஹோட்டல் நிர்வாகம் அலட்சியம்!

#MIvDC

காரக்குழம்பில் காது துடைக்கும் பட்ஸ்: ஹோட்டல் நிர்வாகம் அலட்சியம்!

Published:Category:

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

#MIvDC

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Published:Category:

ஒன்ராறியோவில் எதிரே வந்த கார் மீது மோதி இருவர் உயிரிழப்பு.

#MIvDC

ஒன்ராறியோவில் எதிரே வந்த கார் மீது மோதி இருவர் உயிரிழப்பு.

Published:Category:

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!

#MIvDC

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!

Published:Category:

ரஷ்யாவில் அணுக் கதிர்வீச்சை தடுக்கக் கூடிய மாத்திரைகள் விநியோகம்.

#MIvDC

ரஷ்யாவில் அணுக் கதிர்வீச்சை தடுக்கக் கூடிய மாத்திரைகள் விநியோகம்.

Published:Category:

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் ஹோமாகம பகுதியில் கைது

#MIvDC

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் ஹோமாகம பகுதியில் கைது

Published:Category:

மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு.

#MIvDC

மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு.

  • Thedipaar