Published:Category:

கெவின் ஓ பிரையன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.

#MIvDC

கெவின் ஓ பிரையன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாகப் பிரபல அயர்லாந்து கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரையன் அறிவித்துள்ளார்.

38 வயது கெவின் ஓ பிரையன் அயர்லாந்து அணிக்காக 2018 முதல் 2019 வரை 3 டெஸ்டுகள், 153 ஒருநாள், 110 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

கடைசியாக 2021 டி20 உலகக் கிண்ண போட்டியில் விளையாடினார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கெவின் ஓ பிரையன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிக்கையில் அவர் கூறியதாவது:

என் நாட்டுக்காக 16 வருடங்களாக 389 ஆட்டங்களில் விளையாடிய பிறகு என்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறேன். அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண போட்டியுடன் ஓய்வு பெற எண்ணியிருந்தேன்.

ஆனால் கடந்த உலகக் கிண்ணத்திற்கு பிறகு அயர்லாந்து அணிக்கு நான் தேர்வாகவில்லை.

தேர்வுக்குழுவினரும் நிர்வாகமும் வேறு திசையில் செல்கிறார்கள் என எண்ணுகிறேன்.

அடுத்ததாக இளம் வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதில் ஆர்வமாக உள்ளேன் என்றார்.

கெவின் ஓ பிரையன் என்றால் 2011 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் விளையாடியது தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.

அயர்லாந்து அணி 106/4 எனத் தடுமாறிக் கொண்டிருந்தபோது களமிறங்கினார் கெவின் ஓ பிரையன். அதன் பிறகு நிலைமை 111/5 என மேலும் மோசமானது. 327 ஓட்டங்கள் இலக்கு.

ஆனால் அதிரடியாக விளையாடி சூழலை மாற்றினார் கெவின் ஓ பிரையன். 6 சிக்ஸர்களுடன் 50 பந்துகளில் சதமடித்தார். உலகக் கிண்ண வரலாற்றில் விரைவாக அடிக்கப்பட்ட சதம் அது.

ஆண்டர்சன், பிராட், ஸ்வான் அடங்கிய இங்கிலாந்துப் பந்துவீச்சைத் திறமையாக எதிர்கொண்டு 3 விக்கெட் வித்தியாசத்தில் மறக்க முடியாத வெற்றியைப் பெற்றது அயர்லாந்து. 63 பந்துகளில் 113 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கெவின் ஓ பிரையன்.

உலகக் கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்களை விரட்டிய பெருமையை அடைந்தது அயர்லாந்து.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

#MIvDC

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

Published:Category:

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

#MIvDC

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

Published:Category:

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

#MIvDC

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

Published:Category:

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

#MIvDC

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

Published:Category:

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

#MIvDC

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

Published:Category:

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

#MIvDC

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

Published:Category:

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

#MIvDC

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

Published:Category:

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

#MIvDC

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

Published:Category:

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

#MIvDC

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

Published:Category:

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

#MIvDC

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

  • Thedipaar