Published:Category:

அமெரிக்காவை சாடும் புடின்.

#MIvDC

அமெரிக்காவை சாடும் புடின்.

அமெரிக்கா, உக்ரைனில் போர் நீடிக்க வேண்டும் என முயல்வதாகவும், உலகில் போரை தூண்டும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது எனவும் புடின் குற்றம் சாட்டியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

பெலோசியின் தைவான் பயணம் பதற்றத்தை தூண்ட "கவனமாக திட்டமிடப்பட்ட " என்று சாடிய புடின், இது "மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடும் வகையிலான செயல் என்றும், சர்வதேச பொறுப்புணர்ச்சி இல்லாத்ச செயல் என்றும் ப்புடின் சாடினார்.

அமெரிக்கா, உக்ரைனில் போர் நீடிக்க வேண்டும் என முயல்வதாகவும், உலகில் போரை தூண்டும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது எனவும் புடின் குற்றம் சாட்டியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை புடின் குறிப்பாக சுட்டிக்காட்டினார்.

போரை நீடிக்க வேண்டும் என அமெரிக்கா முயற்சிக்கிறது என்பதை உக்ரைனின் நிலைமை காட்டுகிறது.

மேலும் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் போரை தூண்டி விட தொடர்ந்து முயன்று வருகிறார்கள்,"என புடின் கூறியுள்ளார்.

தைவான் தொடர்பான அமெரிக்காவின் இந்த சாகச செயல் ஒரு பொறுப்பற்ற அரசியல்வாதியின் பயணம் மட்டுமல்ல, பிராந்தியத்திலும் உலகிலும் நிலைமையை சீர்குலைத்து குழப்பமடையச் செய்வதற்கான நோக்கம்.

இது அமெரிக்க மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்,"என்று அவர் மேலும் கூறினார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினால், ஆயிரக்கணக்கானோர் இறந்தனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்படவும் வழிவகுத்தது.

அணு ஆயுத தாக்குதல் நடக்குமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு மாநாட்டில் பேசிய ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாஸ்கோ திட்டமிடவில்லை என்றார்.

பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதலை நடத்தியதில் இருந்து, அமெரிக்கா அதன் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இந்த தடைகள் அனைத்தையும் எதிர்கொண்டு ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுடன் குறிப்பாக சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்த புடின் முயற்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

#MIvDC

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

Published:Category:

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

#MIvDC

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

Published:Category:

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

#MIvDC

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

Published:Category:

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

#MIvDC

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

Published:Category:

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

#MIvDC

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

Published:Category:

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

#MIvDC

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

Published:Category:

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

#MIvDC

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

Published:Category:

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

#MIvDC

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

Published:Category:

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

#MIvDC

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

Published:Category:

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

#MIvDC

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

  • Thedipaar