Published:Category:

யாழ். பல்கலைக்கழகத்தில் தற்கொலை முயற்சி.

#MIvDC

யாழ். பல்கலைக்கழகத்தில் தற்கொலை முயற்சி.

தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்போன்றிக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார்.

அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் , அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது.

அந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசியர் தனது தனிப்பட்ட காரணத்தால் வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடை நிறுத்தி தனது துறைத்தலைவர் பதவியில் நீடித்தார்.

அதனால் புதிதாக துறைத்தலைவராக நியமனம் பெறவிருந்த பேராசியர் ஏமாற்றத்திற்கு உள்ளானார்.

அதன் காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பேராசிரியர் , நேற்றைய முன் தினம் திங்கட்கிழமை தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கு துறைத்தலைவர் பதவி கிடைக்காவிடின் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த குறித்த பேராசியர் துணைவேந்தர் முன்னிலையில் தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு, அவரை தடுத்து நிறுத்தி, சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை பகிடிவதை புரிந்தவர்கள் எனும் சந்தேகத்தில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 18 மாணவர்களின் படங்களை விரிவுரையில் பேராசிரியர் ஒருவர் காண்பித்து , "இவர்கள் தான் பல்கலைக்கழக மாபியாக்கள் " என கூறியமையால் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவன் ஒருவன் நேற்றைய முன் தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் மற்றுமொரு பல்கலைக்கழக மாணவி ஒருவர் யாழ்.புறநகர்ப் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரை மாய்க்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக பேராசியர், மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் யாழ்.பல்கலை சமூக மட்டத்தில் அதிருப்தியும் விசனமும் எழுந்துள்ளது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

Markham நகரில் காணாமல் போன தமிழ் சிறுமி அஞ்சனா!

#MIvDC

Markham நகரில் காணாமல் போன தமிழ் சிறுமி அஞ்சனா!

Published:Category:

பள்ளி மீது ரான்சம்வேர் தாக்குதல் - திருடிய 500 ஜிபி தகவல் கசிவு!

#MIvDC

பள்ளி மீது ரான்சம்வேர் தாக்குதல் - திருடிய 500 ஜிபி தகவல் கசிவு!

Published:Category:

முதியவர் வயிற்றில் முழு கண்ணாடி டம்ளர்; மருத்துவர்கள் அதிர்ச்சி!

#MIvDC

முதியவர் வயிற்றில் முழு கண்ணாடி டம்ளர்; மருத்துவர்கள் அதிர்ச்சி!

Published:Category:

காரக்குழம்பில் காது துடைக்கும் பட்ஸ்: ஹோட்டல் நிர்வாகம் அலட்சியம்!

#MIvDC

காரக்குழம்பில் காது துடைக்கும் பட்ஸ்: ஹோட்டல் நிர்வாகம் அலட்சியம்!

Published:Category:

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

#MIvDC

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Published:Category:

ஒன்ராறியோவில் எதிரே வந்த கார் மீது மோதி இருவர் உயிரிழப்பு.

#MIvDC

ஒன்ராறியோவில் எதிரே வந்த கார் மீது மோதி இருவர் உயிரிழப்பு.

Published:Category:

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!

#MIvDC

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!

Published:Category:

ரஷ்யாவில் அணுக் கதிர்வீச்சை தடுக்கக் கூடிய மாத்திரைகள் விநியோகம்.

#MIvDC

ரஷ்யாவில் அணுக் கதிர்வீச்சை தடுக்கக் கூடிய மாத்திரைகள் விநியோகம்.

Published:Category:

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் ஹோமாகம பகுதியில் கைது

#MIvDC

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் ஹோமாகம பகுதியில் கைது

Published:Category:

மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு.

#MIvDC

மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு.

  • Thedipaar