உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.
நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், நாக் அவுட் சுற்றுகள் நள்ளிரவுடன் முடிந்தது. நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை மறுதினம் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதியில் குரோசியா, பிரேசில் அணிகள் மோதுகின்றன.
டிசம்பர் 10-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது காலிறுதியில் மொராக்கோ, போர்ச்சுக்கல் அணியும், நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 3-வது காலிறுதியில் நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகளும் மோதுகின்றன. நான்காவது காலிறுதி டிசம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?
பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!
செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!
ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?
அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!
அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது
ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை
உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்
அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி