விண்கல் மாதிரியுடன் பூமியை நெருங்கும் நாசாவின் விண்கலம்!
விண்கல் மாதிரியுடன் பூமியை நெருங்கும் நாசாவின் விண்கலம்!
பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் பென்னு என்ற விண்கல்லை ஆய்வு செய்வதற்காக ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நாசா செலுத்தியது.
விண்கலம், 2 ஆண்டுகள், 2 கோடி கி.மீ. தூரம் பயணித்து, 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி பென்னு என்ற விண்கல்லை நெருங்கியது. பென்னுவில் இருந்து 19 கி.மீ. தூரத்தை அணுகியது.
அதன்பின், தரையிறங்காமல் மிக நெருக்கமாக சென்று இயந்திர கையை நீட்டி விண்கல்லில் உள்ள மாதிரிகளை சேகரித்துள்ளது.
2020ம் ஆண்டு தனது இறுதிக்கட்ட பணியை நிறைவு செய்த ஓசிரிஸ் ரெக்ஸ், அந்த விண்கல்லின் மேற்பரப்பில் சேகரிக்கப்பட்ட மாதிரியுடன் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்த விண்கலம், தான் சேகரித்த மாதிரிகளுடன் வரும் 24ம் தேதி பூமியை வந்தடைகிறது.
பூமியை விண்கலம் நெருங்கியதும் அதிலிருந்து விண்கல் மாதிரி வைக்கப்பட்ட கலன் மட்டும் தனியாக பிரிந்து வரும். உட்டா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பாலைவனத்தில் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் இந்த கேப்ஸ்யூலை விண்கலம் பிரித்துவிடும்.
அதிவேகமாக பாய்ந்து வரும் கேப்ஸ்யூல் பாராசூட் மூலம் படிப்படியாக வேகம் குறைந்து தரையில் விழுந்ததும் அதனை பாதுகாப்பாக ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
இதற்கான ஒத்திகையை நாசா விஞ்ஞானிகள் சமீபத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டனர். விண்கலம் பூமியை நோக்கி திரும்புவதற்கான முக்கியமான பணியையும் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.