Published:Category:

முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை கொலை செய்ய முயன்றவர் கைது

#MIvDC

முல்லைத்தீவில் முன்னணியின் செயற்பாட்டாளர்களை கொலை செய்ய முயன்றவர் கைது

முல்லைத்தீவில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து நகர்ந்த  நபர் ஒருவரை மக்கள் பிடித்து மாங்குளம் பொலீசில் ஒப்படைத்துள்ளார்கள்

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொலை செய்ய முயன்ற நபரே மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
 
நேற்று மதியம் 02 மணியளவில் மாங்குளம் நகரப்பகுதியிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு சென்ற ஒருவர் கிந்துஜனின் வீட்டிற்கு செல்ல வேண்டுமெனக்கூறி முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு பிடித்துள்ளார். அவரின் நடத்தையில் சந்தேகமடைந்த சாரதி எதற்காக செல்கிறீர்கள் என கேட்டபோது அவருக்கு பரிசு கொடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.
 
சற்று நேரத்தில் அவர் தன்னை உருமறைப்பதற்காக ஒட்டியிருந்த தாடி உரிந்துள்ளது. இதையடுத்து அவர் தப்பியோடி வீதியால் சென்ற இ.போ.ச பேருந்தில் ஏறமுயற்சித்த போது அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இதன் போது அவரிடமிருந்து ஒன்றரை அடி நீள வாள், கயிறு மற்றும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
அவரை விசாரித்ததில் அவர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் பிறேம் மற்றும் கிந்துஜனை கொல்லவந்ததாக கூறியுள்ளார். அதனையடுத்து அவர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பமவ் தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர் தி.கிந்துஜன் அவர்களினால் மாங்குளம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar